தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (கைகளின் பெயர்):-
1. தலையணி:-
தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை,
அரசிலை,பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.
2. காதணி :-
தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,
கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்.
3. கழுத்தணிகள்:-
கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை,
நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை,
மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம்,
மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.
4. புய அணிகலன்கள்:--
கொந்திக்காய்.
5. கை அணிகலன்:-
காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு.
6. கைவிரல் அணிகலன்கள்:-
சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.
7. கால் அணிகலன்கள்:--
மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு.
8. கால்விரல் அணிகள்:-
கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி,
பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.
9. ஆண்களின் அணிகலன்கள் :-
வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண்,
பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம்,
கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம்,
முத்து வடம், கடுக்கண், குண்டலம் -- ஆகியனவாகும்.
No comments:
Post a Comment